Breaking News

போராட்ட வடிவத்தை மாற்ற புதுக்குடியிருப்பு மக்கள் உத்தேசம்



கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி தொடர் சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுக்குடியிருப்பு மக்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு பிரதேச செயலாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இம்மக்களின் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் உரிய தீர்வை பெற்றுத்தருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், போராட்டம் இன்றுடன் 11 நாட்களை எட்டியுள்ளபோதும் தீர்வு கிடைக்காததால் இச் சந்திப்பை நடத்துவற்கு தீர்மானித்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் கிடைக்கும் பதிலைப் பொறுத்து தமது போராட்ட வடிவம் மாற்றமடையுமென புதுக்குடியிருப்ப மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற்கதவை மறித்து இம் மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.