Breaking News

யாழில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர் இந்திய மீனவர்கள்



இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 31 இந்திய மீனவர்கள், தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக தாம் சிறைவைக்கப்பட்டுள்ளதால், குடும்பங்களை இழந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் மீனவர்கள், தம்மை விடுவிப்பதோடு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது உண்ணாவிரத போராட்டம் குறித்து யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் இந்திய துணைத்தூதுவருக்கு மகஜர் மூலம் அறிவித்துள்ளதாகவும் இம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.