Breaking News

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி-தமிழரசு கட்சி(காணொளி)


மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான்
எமது நிலைப்பாடு என தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கள் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவரைகாலமும் ஒட்டுக்குழுவாக செயற்பட்ட ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கையாகவிருந்த அதே கருத்தை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளதோடு த.தே.கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதோடு அவர்களுக்கு பேச்சுவார்த்தை என்ற பாத்திரத்தில் எந்த அருகதையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளை சேர்ந்த முன்னாள் ஆயுதப் போராட்டத்தில் இருந்தவர்களுக்கு அவர் சொல்லும் அட்வைஸ் என்ன?
1.நீங்கள் பேசுவதை அரசு கேட்குமா?
2.நீங்கள் சமுதாயத்திற்கு தலைமை தாங்கக்கூடியவர்களா? உங்களை அவர்கள் மதிப்பார்களா?
3.நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள்? உங்கள் வரலாறு என்ன என்பது எங்களுக்கு தெரியும்?
4.ஜனாதிபதியோ பிரதமரோ உங்களை மதிப்பார்களா?
இப்ப புரிகிறதா தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதும் ஏனைய கட்சிகளை அவர்கள் எவ்வாறு கையாள்கின்றார்கள் என்பதும் ஏனைய கட்சியினருக்கு புரியுமா என்பது தெரியவில்லை.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்