எல்லை நிர்ணய அறிக்கை உள்ளிட்ட பல தொகுதிகள் வர்த்தமானியில்?
எல்லை நிர்ணய அறிக்கை உள்ளிட்ட பல தொகுதிகள் இன்றைய தினம் வர்த்தமானியில் அறிக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலக காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு தொடர்பிலும் இந்த கலந்துரையாலின் போது ஆராயப்பட்டதாக கூறியுள்ளார்.
அதன்படி, எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரு தினங்களில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும்அதன்பின்னர் தேர்தல்கள் ஆணையாளரே ஏனைய பணிகளை மேற்கொள்வார் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.








