Breaking News

திடீரென சிங்கப்பூருக்குப் பறந்தார் மகிந்த



சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிரணியைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழுவொன்றுக்குத் தலைமையேற்று மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணத் திட்டம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்னிரவில் திடீரென அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றமைக்கான காரணங்கள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை.