Breaking News

'எழுக தமிழ் பேரணி', இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டது


கிழக்கில் நடைபெறவுள்ள 'எழுக தமிழ் பேரணி', இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி மட்டக்களப்பில் 'எழுக தமிழ் பேரணி' நடைபெறவுள்ளது.இது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நடத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.இதன்காரணமாகவே முன்னர் 'எழுக தமிழர் பேரணி'யாக இருந்த இந்த பேரணி, 'எழுக தமிழ் பேரணி' என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.