Breaking News

பல்கலை கல்விசாரா ஊழியர்கள் இன்று பகிஷ்கரிப்பில்


பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று நாடளாவிய ரீதியில் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிங்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே இதனைத் தெரிவித்துள்ளார்.2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுதியளித்தவாறு கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் தமக்கு வேதன உயர்வை வழங்கவில்லை.

எனவே, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று நாடுமுழுவதும் அடையாள பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேதன அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால், இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்