Breaking News

வடக்கு- கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது: ஹக்கீம்



வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது எனவும் நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிரைப் போல நீரைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளிலான விசேட வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்விதமாக ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதனூடாக வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது.

இரண்டு மாகாணங்களையும் இணைப்பதற்கு முஸ்லிம் மக்கள் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெறும்பான்மையைப் பெற வேண்டும். ஆனால் அதுவும் சாத்தியமில்லை.

எனவே வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை கைவிட்டு, பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும்’ என்றார்.