Breaking News

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை



கேப்பாபுலவு கிராம மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்து கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயத்தில் மூன்றாவது நாளாகவும் சிவலிங்க பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேப்பாபுலவு பகுதியிலுள்ள தமது காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் வேலாயுதபிள்ளை என்பவரே இந்த பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் இன்று ஒன்பதாவது நாளாகவும் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வுகிட்ட வேண்டி கடந்த திங்கட்கிழமை சிவலிங்க வழிபாடு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள ஆறுமுகம் வேலாயுதபிள்ளை ஆகம விதிப்படியுள்ள ஆறுகால பூஜைகளை மேற்கொண்டு வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது

.