Breaking News

‘கொலை குற்றச்சாட்டிலிருந்து மஹிந்தவை நானே காப்பாற்றினேன்’ – சரத் என் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்பு சுமத்தப்பட்டிருந்த இரண்டு கொலைக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தானே அவரை காப்பாற்றியதாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கொலை குற்றச்சாட்டுகள் மற்றும் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக மஹிந்த மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக தெரிவித்த சரத் என் சில்வா, தனது நண்பரான மஹிந்தவிடம் இதுகுறித்து கேட்டபோது தான் அவ்வாறு செய்யவில்லை எனக் குறிப்பிட்டதாக கூறினார். எனினும், மஹிந்தவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினரால் இரண்டு பொய்சாட்சிகள் சோடிக்கப்பட்டதாகவும் பின்னர் அதன் உண்மைத் தன்மையை கண்டுபிடித்து பொய்சாட்சியாளர்களை சிறையில் அடைத்து மஹிந்தவை காப்பாற்றியதாகவும் சரத் என் சில்வா இதன்போது குறிப்பிட்டார்.

இவ்வாறு அன்று நீதிபதிகள் நீதிமன்ற மனநிலையில் இருந்து செயற்பட்டதாகவும் இன்று அதற்கான சூழல் இல்லையெனவும் தெரிவித்த சரத் என் சில்வா, தற்போதைய பொலிஸ் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவால் எவ்வித பலனும் இல்லையென்றும் அதனை மூடுவதற்கு தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.