Breaking News

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரபலங்களிடையே குவியும் ஆதரவு!

மெரினாவில் மவுனம் கலைத்து கலகக் குரலாய்

ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரின் இந்த அதிரடி பேட்டிக்கு அ.தி.மு.க கட்சியினரிடையே ஆதரவும் எதிர்ப்பு மாற்றி மாறி எழுந்து வருகின்றன. ஆனால் சமூக வலைதளங்களிலோ காற்று ஓ.பி.எஸ் பக்கம் பலமாய் அடிக்கிறது. சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இது!

சமீப காலமாக ட்விட்டரில் அதிரடியாக கருத்துகளை தெரிவித்து வரும் கமல், 'சில ஆண்டுகளுக்கு முன் இதே பிப்ரவரி ஏழாம் தேதிதான் மக்களின் அன்பிற்கு முன்னால் அதிகாரம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன். அப்படியே இப்போதும் இருக்கவேண்டும்' எனக் கூறியிருக்கிறார். பிப்ரவரி ஏழாம் தேதிதான் விஸ்வரூபம் வெளியானது. மற்றொரு ட்வீட்டில் 'நிம்மதியாய் தூங்கு தமிழகமே... அவர்கள் நமக்கு முன்பாக முழித்துவிடுவார்கள்' எனக் கூறியிருக்கிறா 


ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை குஷ்பு, 'தமிழக மக்களில் ஒரு சிலரைத் தவிர்த்து மற்ற அனைவரும் நிம்மதியாக தூங்குவார்கள், 'ஒரு நாயகன் உதயமாகிறான்' எனக் கூறியுள்ளார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான சுப.வீரபாண்டியன், 'சாது மிரண்டது, சுயமரியாதை வென்றது' என ட்வீட்டியுள்ளார்.

சமீப காலமாக அரசியலில் ஆர்வம் செலுத்திவரும் நடிகை கெளதமி, 'இதற்காகத்தான் அம்மா ஓ,பி.எஸ்ஸை தேர்ந்தெடுத்தார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர். அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்' எனக் கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா, 'சரியான நேரத்தில் துணிச்சலாக பேசியுள்ளார் ஓ.பி.எஸ். வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளார். 
தயாநிதி அழகிரி, 'ஓ.பி.எஸ் இவ்வளவு துணிச்சலாய் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் முதல்வரே! ஆனால் எந்நேரமும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம்' என ட்வீட்ட, அடுத்த சில நிமிஷங்களிலேயே ஓ.பி.எஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது.

நடிகர் அருள்நிதி, 'தைரியமான பேச்சு ஓ.பிஎஸ் சார். உண்மையை உரக்கச் சொன்னதன் மூலம் தமிழக மக்களுக்கு உங்களின் நேர்மையை நிரூபித்துவிட்டீர்கள்' எனக் கூறியுள்ளார்.

அவ்வப்போது பரபர கருத்துகளை சொல்லும் நடிகர் சித்தார்த், 'ஓ.பி.எஸ் மெரினாவில் இருக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் போன்ற சீரியல்களை நேரில் பார்ப்பது போல இருக்கிறது' என ட்வீட்டினார்.
இசை அமைப்பாளர் இமான், 'தமிழக அரசியலில் இப்போதுதான் நம்பிக்கை பிறக்கிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியாக பேசியிருக்கிறார். நீதி வாழ்கிறது' என ட்வீட்டியுள்ளார். 
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'எவன் வந்து அடக்குவான் மறத்தமிழ் மகன் உனை, இறப்பினி ஒரு முறை, துணிந்து நீ பகை உடை. உலகுக்கு உரக்க சொல்!' என ட்வீட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், 'இறுதியாக ஓ.பி.எஸ் நிமிர்ந்து நிற்கிறார்' என ட்வீட்டியுள்ளார். 


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்