Breaking News

கேப்பாபுலவு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து நாளைவரும் குழு(காணொளி)

கடந்த எட்டு நாட்களாக இராணுவத்தால்
கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்காக போராடும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பிலிருந்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தை சார்ந்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

மக்களின் இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு சென்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள் நாளையதினம் தமது குழுவுடன் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இன்றையதினம் வருகைதந்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் ,தே.மீ.ஒ.இயக்கத்தின் முல்லை மாவட்ட இணைப்பாதளர் வசீகரன், சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பர்னாந்து ஆகியோர் வருகைதந்து மக்களது பிரச்சனைகளை கேட்டறிந்துள்ளதோடு நாளை தமது ஆதரவையும் தெரிவிக்கவள்ளதாக தமிழ் கிங்டொத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.











முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்