Breaking News

சுமந்திரன் கொலை முயற்சி திட்டமிட்ட நாடகமே-சிறிதரன்


தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர்
சுமந்திரன் மீதான கிளைமோர் தாக்குதல் என்பது திட்டமிட்ட நாடகமே என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


இந்த தாக்குதல் இராணுவத்தை தொடர்ந்தும் வடகிழக்கில் வைத்திருப்பதற்கான திட்டமிட்ட நாடகமா என எண்ணத்தோன்றுகின்றது என அண்மையில் வடமாகாண முதலமைச்சல் கருத்து தெரிவித்திருந்த நிலையில் சிறீதரனும் அதனை உறுதிப்படுத்தும் முகமாக கருத்து தெரிவித்திருப்பது மிகமுக்கியமான செய்தியாகும்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள பா.உ.சிறிதரன் அரசினதும் புலனாய்வுத்துறையினதும் திட்ட மிட்ட நாடகமெனவும் புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என சர்வதேசத்திற்கு காட்டி தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கும் இராணுவத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கும் திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அரசு தாம் விரும்பிய இடங்களில் இடங்களில் கிளைமோர் குண்டுகளை வைத்துவிட்டு அதனை தாமே கண்டுபிடிப்பதுபோல எடுத்து தமக்கு வேண்டியவர்களை கைது செய்வதாகவும் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். 



தொடர்புடைய முன்னைய செய்திகள்

வீதியில் மக்களிருக்க பாரியாருடன் சுமந்திரன் சுதந்திரநாளில் (காணொளி)



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்