Breaking News

மண்மீட்பு போராட்டம் : இன்றே இறுதி நாள் - மக்கள் எச்சரிக்கை

சொந்த காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது.


கடந்த செவ்வாய்கிழமை முதல் மக்கள் இரவு பகலாக பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

நாளைய தினத்திற்குள் தமதுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின் தமது போராட்ட வடிவம் மாற்றமடையும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் தீக்குளிப்பது உயிரை மாய்த்தேனும் தமது சொந்த காணிகளை மீட்க போராடப் போவதாக அம்மக்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் குடியிருப்பு காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.