Breaking News

சுமந்திரனின் பாதுகாப்பை பலப்படுத்தவும்: பாதுகாப்பு தரப்பிற்கு சபாநாயகர் பணிப்புரை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுமந்திரனின் பாதுகாப்பு குறித்து கவனஞ்செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே சபாநாயகர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்கனவே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ள சபாநாயகர், அவரது பாதுகாப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென சபையில் தெரிவித்தார்.

சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பிரதமர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், முன்னாள் போராளிகளே இதற்கான திட்டத்தை தீட்டியுள்ளனர் என எதிரணியினர் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். முன்னாள் போராளிகள் ஐவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில், முன்னாள் போராளிகளை குறிவைப்பதோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் தக்கவைக்கும் முயற்சியில் அரசால் திட்டமிட்டு பரப்பப்பட்ட விடயமே சுமந்திரனின் பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரம் என தமிழ் தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



தொடர்புடைய முன்னைய செய்திகள்

வீதியில் மக்களிருக்க பாரியாருடன் சுமந்திரன் சுதந்திரநாளில் (காணொளி)

இராணுவத்தை வைத்திருக்கவா சுமந்திரனின் நாடகம்?-விக்கி(காணொளி)

தன்மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதால் கேப்பாபுலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லை – சுமந்திரன்

விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை