Breaking News

தமிழக அமைச்சர்கள் பட்டியல்; முழு விவரம்

தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இன்று தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியலை வழங்கினார். அதன்படி, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், சி.வி.சண்முகம் சட்டத்துறை அமைச்சராகவும், தங்கமணி மின்துறை அமைச்சராகவும், செல்லூர் ராஜு கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

விஜய பாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராகவும், ஜெயகுமார் மீன் வளத்துறை அமைச்சராகவும், எம்.சி.சம்பத் தொழில்துறை அமைச்சராகவும், சீனிவாசன் வனத்துறை அமைச்சராகவும் ஓ.எஸ். மணியன் கைத்தறித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுபோன்று தமிழக அமைச்சரவையில் மொத்தம் 31 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கவுள்ளார்.
அமைச்சர்கள் விவரம்
* பள்ளிக்கல்வித்துறை – செங்கோட்டையன்
* மீன்வளத்துறை – டி.ஜெயக்குமார்
* கூட்டுறவுத்துறை – செல்லூர் கே.ராஜூ
* வனத்துறை – திண்டுக்கல் சினிவாசன்
* சட்டம் மற்றும் சிறைத்துறை – சி.வி.சண்முகம்
* சமூகநலத்துறை – வி.சரோஜா
* சுற்றுச்சூழல் துறை – கருப்பணன்
* உணவுத்துறை – காமராஜ்
* கைத்தறித்துறை – ஓ.எஸ்.மணியன்
* வீட்டு வசத்திதுறை – உடுமலை ராதாகிருஷ்ணன்
* வேளாண்மைத்துறை – துரைக்கண்ணு
* செய்தி விளம்பரத்துறை – கடம்பூர் ராஜூ
* சுற்றுலாத்துறை – வெல்லமண்டி நடராஜன்
* பால்வளத்துறை – கே.டி.ராஜேந்திரபாலாஜி
* தொழிலாளர்நலத்துறை – நிலோஃபர் கஃபில்
* போக்குவரத்துத்துறை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
* பிற்படுத்தோர் நலத்துறை – வளர்மதி
* ஆதிதிராவிடர் நலத்துறை – ராஜலெட்சுமி
* மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை – தங்கமணி
* உள்ளாட்சித்துறை – எஸ்.பி.வேலுமணி
* மக்கள் நல்வாழ்வுத்த்துறை – விஜய பாஸ்கர்
* வருவாய்த்துறை – ஆர்.பி. உதயகுமார்
* தகவல் தொழில்நுட்பம் – எம்.மணிகண்டன்
* தொழில்துறை – எம்.சி.சம்பத்
* ஊரக தொழில்துறை – பெஞ்சமின்
* இந்து அறநிலையத்துறை – சேவூர் ராமச்சந்திரன்
* உயர்க்கல்வித்துறை – கேபி.அன்பழகன்
* காதி, கிராமத் தொழில்துறை – பாஸ்கரன்
* வணிகவரித்துறை – கேசி வீரமணி










முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்