Breaking News

காளான்கள் மரங்களாகமுடியாது -துரைராஜசிங்கத்தின் கண்டுபிடிப்பு(காணொளி)

காளான்கள் ஒருபோதும் மரங்களாக மாறிவிட முடியாது என கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கள் கூறியுள்ளார். 

கிழக்கு மாகாண எழுக தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் தமது ஆதரவை த.ம.பேரவைக்கு காண்பித்ததோடு தமது அபிலாசைகளையும் உலகிற்கு ஓங்கி ஒலித்திருந்த நிலையில் தலைமையில் ஏதும் தடுமாற்றம் வந்துவிடுமா என அஞ்சும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் துரைராஜசிங்கம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிவுற்ற எழுக தமிழ் நிகழ்வினை தடுப்பதற்கும் மீறி நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளும் மக்களின் அளவை குறைப்பதற்கும் கடும் பாடுபட்ட மட்டக்களப்பு தமிழரசுக்கட்சியினர் அது முடியாமல் போய் மக்கள் மிக அதிகளவாக கலந்துகொண்டமையால் மிகவும் ஆத்திரமடைந்துள்ள நிலையின் வெளிப்பாடாகவே துரைராஜசிங்கத்தின் பேச்சு அமைந்திருப்பதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது பேச்சில் முஸ்லீம்களுக்கு முஸ்லீம் காங்கிரசும் தமிழ் மக்களுக்கு த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுமே தலைவர்கள் என்றும் தலைமைகள் என்பது அனுபவம், ஆளுமை, உலக அரங்கிலே பெற்ற அந்தஸ்து மற்றும் சிங்கள தலைவர்களால் மதிக்கப்படுபவர்களே தலைவர்கள் என்றும் சிலர் தற்போது முளைக்க வெளிக்கிடுகின்றன என்றும் அது மழைவிடுகின்றபோது வரும் காளான்கள் என்றும் அந்த காளான்களை மரங்களாக யாரும் நம்பிவிடாதீர்கள் என்றும் பேசியிருந்தார்.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் தும்பங்கேணியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இருந்தும் உலக தமிழர்களிடத்திலும் தாயகத்தமிழர்களிடத்திலும் வடமாகாண முதலமைச்சருக்கு சம்பந்தரைவிட அதிகப்படியான வரவேற்பு உள்ளபோதும் சிங்களத்தலைவர்களிடத்தில் சம்பந்தன் மட்டுமே வரவேற்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




முன்னைய தொடர்புடைய செய்திகள்





முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்