100-ல் பத்து சதவிகிதம் தான் வெளியே பேசியிருக்கிறேன் - ஓ.பன்னீர் செல்வம்
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்து பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்து வருகிறார்.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்களாவது:-
கடந்த வாரங்களாக என் மனதில் தேக்கி வைத்திருந்த ஆதங்கத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளேன். சாதரண குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற பலரை பதவி கொடுத்து இந்த நிலைக்கு உயர்த்தியது அம்மாதான். எனவே, அவரது நினைவிடத்திற்கு சென்று அவரது ஆன்மா சாந்தி அடைவதற்கு பிராத்தனை செய்தேன்.
பழைய நிகழ்வுகள் மனதில் காட்சியாக விரிந்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. எனவே, அம்மாவின் நினைவில் பரிகாரம் தேட தான் சென்றேன். அப்போது, அம்மாவின் நினைவுகள் மட்டுமே என்னுடைய மனத்திரையில் ஓடியது.
தியானத்தின் போது மனதில் தோன்றிய கருத்துக்களை நான் வெளிப்படுத்திட வேண்டியிருந்தது, கண்விழித்து பார்த்த போது பத்திரிக்கையாளர்கள் திரண்டு இருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை.
என் மனதில் உள்ள விஷயங்களில் நூற்றில் 10 சதவீதம் தான் வெளியே சொல்லி இருக்கிறேன். நடந்ததை அனைவரிடமும் கூறினால்தான் தான் ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்தேன் எனவே, பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆக்கப்பட்டேன்.
என கூறியுள்ளர்.








