Breaking News

பிரித்தானிய சபாநாயகர் டிரம்புக்கு தடை- காரணம் அவர் ஒர் இனவாதி



அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்ற அந்நாட்டு பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜோன் பர்கவ் தடை விதித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியொருவருக்கு பிரித்தானியா இவ்வாறு தடையொன்றை விதித்துள்ளது இதுவே வரலாற்றில் முதற்தடவையென சுட்டிக்காட்டப்படுகின்றது.

பிரித்தானிய சபாநாயகர் டிரம்பை ஒரு இனவாதியென பெயரிட்டுள்ளார்.

சீனா, குவைட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் அரச தலைவர்களுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பிரித்தானிய பாராளுமன்றத்திலுள்ள மிக செல்வாக்கும், அரசியல் பலமுள்ள தலைவர்கள் சிலரில் சபாநாயகரும் ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.