பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி சரண்!
சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்றத்தில் மாலை சரணடைந்தனர். ஆனால், சுதாகரன் சரணடையவில்லை என்று கூறப்படுகிறது. சரணடைந்த சசிகலா, இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்ததோடு, உடனடியாக பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா மனுவை தள்ளுபடி செய்ததோடு, உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, அங்கு கையை ஓங்கி அடித்து மூன்று முறை சபதம் எடுத்துக் கொண்டார். பின்னர், ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்றார். அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா, சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். மாலை 5.15 மணிக்கு சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குச் சென்றார். அவருடன் இளவரசியும் சென்றார்.
கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஷ்வத் நாராயணா முன்பு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட உள்ளனர். ஆனால், சுதாகரன் நீதிமன்றத்தில் சரணடையவில்லை.
அவகாசம் கோரி சுதாகரன் மனு
இதனிடையே, நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி பெங்களூரு உரிமையியல் அமர்வு நீதிமன்றத்தில் சுதாகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் நாளை சரண் அடைந்துவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சுதாகரனின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. எனவே இன்று இரவுக்குள் சுதாகரன் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
போலீஸ் தடியடி
இதனிடையே, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். மேலும், நான்கு தமிழக வாகனங்கள் உடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்