கேப்பாபுலவு போராட்டத்தை குழப்ப வந்தவர் மடக்கி பிடிக்கப்பட்டார்(காணொளி)

கேப்பாபிலவு போராடடத்தை குழப்புவதுக்கு இராணுவத்தின்
புலனாய்வாளர்கள் சாராயம், கசிப்பு விற்பனை செய்யும் காசிநாதன்ஜெகன் என்பவரை வரவழைத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண்கள் மீது தாக்துல் நடாத்த முற்பட்டவரை மடக்கி பிடித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 13நாட்களாக தொடரும் மக்களின் உறுதியான போராட்டத்தை குழப்பும் நோக்கில் புலனாய்வாளர்களால் அனுப்பப்பட்ட குறித்த நபர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒரு குடும்ப உறுப்பினர் என்பதோடு அவர் அந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மனைவி பிள்ளைகள் மற்றும் அயலவர்களை அச்சுறுத்தி போராட்டத்தை நிறுத்துவது நோக்காக இருந்ததால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் அவரை மடக்கி பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்










