சுமந்திரனால் முடியாதது எங்களால் முடியுமா? -பொதுமகன் கேள்வி
கேப்பாப்பிலவு மக்கள் பிரதமருடன்
பேச்சு வார்த்தைக்கு வந்திருந்தால் சரியான தீர்வு கிடைத்திருக்கும். இது தொடர்பில் நாமும் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் சுமந்திரனின் கருத்து தவறானது என்றும் அப்படியானால் புதுக்குடியிருப்பிலிருந்து சென்றவர்கள் பிரதமரை சந்தித்தார்கள் அவர்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை சுமந்திரனும் அரசுடன் பேசிவருகிறாரே அவரால் இந்த காணிகளை விடுவிக்க முடிந்ததா என்றும், மக்கள்தான் தமது பிரச்சனைகளை பிரதமருடன் பேசி தீர்வு காணவேண்டும் என்றால் எம்மால் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகளின் வேலை என்ன எனவும் கேள்வி எழுப்பியுளள்ளார்.
கேப்பாபுலவு போராட்டம் தொடர்பில் சுமந்திரன் கருத்து கூறுகையில்
கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு சம்பந்தமான போராட்டம் தொடர்பாக பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்த போது 243 ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக கூறியதை அமைச்சர்கள் ஏற் றார்கள், விடுவிக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால் விடுவிக்கப்படவுள்ள பகுதி இராணுவத்தினரிடம் உள்ள பகுதி. அதை தவறாக மக்கள் புரிந்து விட்டார்கள் என தெரிவித்தார்.
விமானப்படை வைத்திருக்கும் பகுதிகளையும் விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பிரதமரிடம் அண்மையில் பேச்சுவார்த்தைக்கு மக்கள் அழைக்கப்பட்டார்கள். அந்த அந்த விமானப்படை அதிகாரிகளும் வந்திருந்தனர். ஆனால் அந்த மக்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. வந்திருந்தால் ஒத்திவைப்பு பிரேரணையில் அமைச்சர் றுவான் விஜயவர்தன தெரிவித்த கருத்து உண்மையா இல்லையா என்ற தெளிவு வந்திருக்கும். அப்படி தெளிவு வந்திருந்தால் நாங்களும் தொடர்ச்சியாக அதை குறித்து அரசுக்கு அழுத்தம் கொண்டுத்திருக்கலாம்.
அவர்களுடன் சேர்ந்து தமது நிலத்துக்காக போராட்டம் நடத்தும் புதுக்குடியிருப்பை சேர்ந்த மக்கள் அன் றைய பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். தனியார்களுடைய காணிகளை விட்டு இராணுவம் அகல வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நியாயம் என்று பிரதமர் ஏற்றுக்கொண்டார். உடனடியாக அதற்கு மாற்றீடாக அரச காணி அண்மையில் எங்கு உள்ளது என அறிந்து இராணுவத்தை அந்த இடத்துக்கு செல்லுமாறு வேண்டு கோள் அன்றே விடுக்கப்பட்டது.
அப்பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கலாம். மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் மூலம்தான் இந்த பேச்சுவர்த்தைக்கு சந்தர்ப்பம் கிடைத்தமை துர்ப்பாக்கியம். ஏனெனில் 2011ஆம் ஆண்டில் இருந்து ஒத்திவைப்பு பிரேரணையில் குறித்த விடயம் தொடர்பில் எடுத்து கூறியுள்ளோம். பல தடவை கூறினோம் அரசு செவிசாய்க்கவில்லை இப்போதாவது மக்களின் போராட்டத்தின் பின்னர் செவிசாய்த்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை புதிய அரசியலமைப்புத் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று நடை பெற்றது. இலங்கை சட்டத் தரணிகள் சங் கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இக்கலந்துரையாடலின் பின்னரே சுமந்திரன் எம்.பி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்










