கேப்பாப்புலவு மக்கள்- வடமாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பு!
தொடர்சியாக 13வது நாளாகவும் தமது போராட்டத்தினை தொடரும் கேப்பாப்புலவு மக்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்தனர்.
இன்றைய தினம் முற்பகல் வேளையில் போராட்டத்தினை மேற்கொள்ளும் கேப்பாப்புலவு மக்களை வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கல்வி அமைச்சர் குருகுலராஜா, எதிர்க்கட்சி தலைவர் தவராசா, மற்றும் உறுப்பினர்களான பரஞ்சோதி, சர்வேஸ்வரன், ரவிகரன் ஆகியோர் சந்தித்தனர்.








