வட. மாகாணம் தழுவிய ரீதியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மக்களுக்கு ஆதரவாக, வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இக் கவனயீர்ப்;பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்க்படுகின்றது காலை 8.30 மணிவரை இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
விமானப்படை மற்றும் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பில் கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று 21 நாட்களை எட்டியுள்ளது. அத்தோடு, இம் மக்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி புதுக்குடியிருப்பு மக்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மக்களின் இப்போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் 54 பேரும் பெற்றோருடன் போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைத்து பாடசாலை செல்லும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் மாணவர்களின் இந்த கவனயீர்ப்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.








