Breaking News

சுமந்திரனால் கிராம மட்ட வகுப்புக்கள் ஆரம்பம்(காணொளி)

ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம்
வழங்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் முல்லைத்தீவில்  இன்று நடைபெற்றது.

ஐநா சபையில் இந்த வருடம் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தும் முகமாக தெளிவு படுத்தலாக அது அமைந்திருந்தது.

கூட்டம் இன்று(30) முல்லைத்தீவில் இரண்டு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் வருகையுடன் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். மேற்படி கூட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு பகுதியிலும் ஒட்டுசுட்டான் பகுதியிலும் இடம்பெற்றது.

இந்த கூட்டங்களுக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விசேட அதிரடி படையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.





முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்