கடந்த 2 மாதத்தில் 16479 டெங்கு நோயாளர்கள், 24 பேர் மரணம்- சுகாதார அமைச்சு
இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதத்துக்குள் 16479 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவர்களில் 24 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ருவரி மாதத்தில் இந்த நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.