Breaking News

பதில் வழங்கும்வரை போராடுவோம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்



யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக பதில் வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று 8 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, தபால்மூல கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தை தமிழர் தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக பதில் வழங்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியிலும் போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்படத்தக்கது.