Breaking News

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி



ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி சலுகையை மீள வழங்கக் கூடாது என்று கோரி 52 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை முன்வைத்திருந்தனர்.

இந்த தீர்மானம் மீது பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்றும் இன்றும் விவாதம் நடத்தப்பட்டு சற்று முன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு 119 உறுப்பினர்கள் மாத்திரம் ஆதரவளித்தனர்.

தீர்மானத்துக்கு எதிராக 436 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.