Breaking News

சம்பந்தன் தனது வழி நான் எனது வழியில் -விக்கி(காணொளி)

வடகிழக்கில் இடம்பெறும்
மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவும் தமிழ் மக்கள் பேரவையும் இணைந்து பணியாற்றுவதற்பு புதிய மக்கள் அணியொன்றை உருவாக்கும் திட்டம் இன்று திருமலையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் மற்றும் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 27 ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண கடையடைப்புக்கு விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்தனர்.

வடமாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் கலந்துரையாடினர்.


தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கடந்த மாதத்தில் இருந்து நில மீட்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினரும் தமது ஆதரவினை வழங்குவதெனவும் தீர்மானித்துள்ளனர்.

இதனிடையே ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் இருவரும் வேறு கருத்துக்கள் காணப்படுவதால் நாம் இருவேறு வழிகளில் பயணிக்கிறோம். சம்பந்தன் தனது வழியில் போகிறார் நான் எனது வழியில் பயணிக்கிறேன். இருவரின் நோக்கமும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதேயாகும்.




அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின், போராட்டத்திற்கும், நிலமீட்பு போராட்டம் தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்குவதோடு தொடர்ந்தும் மக்களின் பிரச்சனைகளை ஒருங்கமைத்து போராடுவதற்கும் 

இந்த கலந்துரையாடலில், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் நில மீட்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவினையும் அளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்