Breaking News

இம்முறையும் ஏமாற்றிவிடவேண்டாம் -ரொபட் அன்­டனி

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் தற்­போது
ஏற்­பட்­டுள்ள முரண்­பாட்டு நிலை மையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக் க­ளுக்­கான தீர்வுத் திட்­டத்தை குழப்­பி­ய­டித்து வி­டக்­கூ­டாது. மக்­க­ளுக்­கான நீதி மற்றும் ஏனைய பிரச்­சி­னைகள் ஒரு­புறம் இருக்­கையில் நீண்­ட கால விவ­கா­ர­மான அர­சியல் தீர்வு செயற் பாட்டில் அனைத்து தரப்­பி­னரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்பட வேண்டும். சுய அர­சியல் இலா­பங்­களை நோக்காக கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்­திலும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்­திலும் எந்­த­வொரு தரப்பும் செயற்­பட்டு விடக்­கூ­டாது

நாட்டின் அர­சியல் நகர்­வுகள் மற்றும் அர­சியல் கட்­சி­களின் காய் நகர்த்­தல்கள் என்­பன பாரிய பர­ப­ரப்­பான நிலை­மையை அடைந்து வரு­கி­ன்றன என்றே கூறலாம். ஒரு­புறம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆகியோர் தமது அர­சாங்­கத்தை கட்டிக் காப்­ப­தற்­காக பாரிய அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் மறு­புறம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இழந்த ஆட்­சியை மீண்டும் பிடிப்­ப­தற்­காக முயற்­சித்து வரு­கிறார்.

அதே­வேளை நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சி உறுப்பினர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி உறுப்பினர்களுக்கும் இடை­யி­லான அதி­காரப் போட்­டியும் முரண்­பா­டு­களும் பாரி­ய­ளவில் தலை­தூக்­கி­யுள்­ளன. அவர்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­களும் தினந்­தோறும் அதி­க­ரித்து செல்­கின்­றன. இது இவ்­வா­றி­ருக்க யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் செயற்­பாட்டில் அர­சாங்­கத்­திற்கும் தமிழர் தரப்­புக்­கு­மி­டையில் முரண்­பா­டுகளும் தோற்றம் பெற்­றுள்­ளன.

இது­இவ்­வா­றி­ருக்க பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­குள்ளும் முரண்­பா­டுகளும் பிரச்­சி­னை­களும் என்றுமில்­லாத வாறு தோற்றம் பெற்­றுள்­ளன. மேலும் கூட்டு எதி­ர­ணியும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இவ்­வாறு நாட்டின் அர­சியல் நகர்­வு­க­ளா­னவை பெரும் சூடு­பி­டிப்­ப­தா­கவும் பர­ப­ரப்­பா­க­வுமே இடம்­பெற்று வரு­கின்­றன.

ஒரு நாட்டின் அர­சி­யலை பொறுத்­த­வ­ரை­யிலும் அர­சியல் கட்­சி­களை பொறுத்­த­வ­ரை­யிலும் முரண்­பா­டு­களும் உட்­பூ­சல்­களும் பிரச்­சி­னை­களும் தோன்­று­வது இயல்­பா­ன­தாகும். ஆனால் எமது நாட்­டைப்­பொ­று­த்­த­வ­ரையில் இந்த நிலை சற்று அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அதா­வது பாதிக்­கப்­பட்ட தமிழர் தரப்பு நீதிக்­காக ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அது தொடர்­பான சர்ச்­சை­களும் மறு­புறம் நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யான அர­சியல் தீர்வு விவ­கா­ரமும் தீர்க்­கப்­ப­டாத நிலை­யி­லேயே எமது நாட்டின் அர­சியல் பர­ப­ரப்பில் முக்­கி­யத்­துவம் ஏற்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் பத­விக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிற­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை பெற்றுக் கொடுப்­ப­தாக மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­த­துடன் அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து வருகிறது.

அதற்­கா­கவே பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு பிர­தான வழி­ந­டத்தல் குழுவும் உப­கு­ழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டன. இந் நிலையில் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களும் தடல்­பு­ட­லாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மக்­களின் கருத்­துக்­களை அறி­வ­தற்­காக மக்கள் கருத்­த­றியும் குழுவும் நிய­மிக்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. மக்கள் கருத்­த­றியும் குழுவின் அறிக்­கையும் அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு விட்­டது. மக்கள் கருத்­த­றியும் குழு­வா­னது இரண்­டா­வது கட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

இந் நிலையில் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபையின் கீழ் நிய­மிக்­கப்­பட்ட பிர­தான வழி­ந­டத்தல் குழு­வானது தேர்தல் முறை மாற்றம், ஜனா­தி­பதி முறைமை மாற்றம் மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு ஆகிய மூன்று முக்­கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது. அதன் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆறு உபக்­கு­ழுக்கள் ஏனைய விட­யங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கி­றது. அந்தக் குழுக்கள் தமது அறிக்­கை­களை சமர்­ப­்பித்­துள்­ளன.

அந்த வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த முத­லா­வது நகல் வரைவு இவ் வருடம் மார்ச் மாதம் அளவில் வெளியி­டப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­போதும் அவ்­வாறு நடக்­க­வில்லை. இந்த நிலை­யி­லேயே தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் பாரிய முரண்­பா­டு­களும் தேக்க நிலை­மை­களும் ஏற்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­கான விசா­ரணைப் பொறி­மு­றையில் வெளிநாட்டு நீதி­ப­தி­களை ஈடு­ப­டுத்­து­வதா? - -இல்­லையா என்ற விவாதம் ஒரு­புறம் இருக்க தற்­போது புதிய அர­சி­யல­மைப்பை கொண்டு வரு­வதா அல்­லது. அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுப்­பதா என்­பது தொடர்­பி­லேயே சிக்­கல்கள் ஆரம்­பித்­துள்ளன.

அதா­வது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்றும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமே போது­மா­னது என்றும் வலி­யு­றுத்தி வரு­கி­றது. அத்­துடன் நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு சுதந்­திரக் கட்சி விரும்­ப­வில்லை. அதே­நேரம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்றும் அதற்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்தி வரு­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அர­சியல் தீர்­வுடன் கூடிய புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்றும் அது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் தெரி­வித்து வரு­கி­றது. கூட்டு எதி­ர­ணி­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்றும் அதற்­கான அவ­சியம் எழ­வில்லை என்றும் கூறி­வ­ரு­கி­றது. இவ்­வா­றான நிலை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சர்ச்­சைக்­கு­ரிய நிலைமை தோன்­றி­யுள்­ளது.

இந் நிலைமை ஏன் உரு­வா­னது என்­ப­தற்­கான பின்­ன­ணியை நாம் ஆராய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். உண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போது முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞ­ாப­னத்தில் நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்ப­டு­த்­தப்­படும் எந்­த­வொரு திருத்­தத்­தையும் முன்­னெ­டுக்கப் போவ­தில்லை என அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். எனினும் அதன்­பின்னர் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்­டு­வ­ரு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்சி வாக்­கு­றுதி அளித்­தது. எனினும் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு பிர­தான ­கட்­சிக்கும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான அறுதிப் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை.

ஐக்­கிய தேசியக் கட்சி 106 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும் தேர்­தலில் பெற்றுக் கொண்­டன. அந்த வகையில் எந்­த­வொரு கட்­சிக்கும் அறுதிப் பெரும்­பான்மை கிடைக்­கா­ததன் கார­ண­மாக இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன.

இந்த நிலையில் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான விட­யங்­களில் முரண்­பாடு எற்­பட்­டுள்­ளது. அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்றும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமே போது­மா­னது என்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி வலி­யு­றுத்திக் கூறு­வ­தற்கு பல்­வேறு கார­ணங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அதா­வது தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்­டு­வ­ரு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கிய ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை.

எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வ­தற்கு எந்­த­வொரு அர­சியல் கட்­சிக்கும் மக்­களின் ஆணை கிடைக்­க­வில்லை. ஆகையால் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வதை விடுத்து திருத்தம் மட்­டுமே கொண்டு வர­வேண்டும்.

மேலும் தேர்தல் முறை மாற்­றத்­திற்கும் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கும் செல்ல வேண்­டிய அவ­சியம் இல்லை. எனவே இந்த இரண்டு விட­யங்­க­ளையும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­க­ளாக முன்­வைத்து அவற்றை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றிக் கொள்ள முடியும். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு செல்­லாமல் திருத்­தத்­திற்கு செல்­வதே மேலா­ன­தாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி, அதற்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை நடத்தி, அது தோல்­வியை தழு­வினால் அத­னூ­டாக தேர்தல் முறை மாற்­றத்­தையும் அர­சியல் தீர்­வையும் கூட அடைந்து விட முடி­யாத நிலைமை ஏற்­படும்.

இவ்­வாறு சுதந்­திரக் கட்­சி­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்­ப­தற்­கான விள­க்­கத்­தினை அளித்து வரு­கி­றது. இவ்­வா­றான வகை­யி­லேயே தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த முரண்­பா­டு­களும் சர்ச்­சை­களும் தோற்றம் பெற்­றுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரு­வ­தற்­கான ஆர்வம் காணப்­பட்­டாலும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வின்றி அதனை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற முடி­யாது.

எனவே இரண்டு கட்­சி­களும் இணைந்து இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வ­த­னூ­டா­கவே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான தீர்­மா­னத்­திற்கு வர­மு­டியும். அத­னை­வி­டுத்து இரண்டு கட்­சி­களும் இவ்­வாறு தொடர்ந்து முரண்­பட்டுக் கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை.

அர­சாங்­கத்தை பொறுத்­த­வரை புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்து தமிழ் மக்களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்த விட­யத்தில் தொடர்ந்தும் இழுத்­த­டிப்­புக்­களை செய்து கொண்­டி­ருக்க கூடாது.

தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்­வுக்­காக நீண்­ட­கா­ல­மாக போராடி வரு­கின்­றனர். அர­சியல் தீர்வை பெற்றுக் கொள்­வ­தற்­கான கடந்த கால போராட்­டங்கள் பல்­வேறு வடி­வங்­களை பெற்றிருந்த போதும் அவை வெற்றி பெற­வில்லை. மக்கள் தொடர்ந்தும் அர­சியல் தீர்­வுக்­காக ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இந் நிலையில் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு முன்­வைக்­கப்­படும் என்ற நம்­பிக்கை மேலோங்­கி­யது. அதா­வது புதிய அர­சாங்­கத்தில் இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­துள்­ளதன் கார­ண­மாக அர­சியல் தீர்­வா­னது சாத்­தி­ய­மாகும் என்ற எதிர்­பார்ப்பும் ஏற்­பட்­டது.

காரணம் கடந்த காலங்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சியில் இருக்­கும்­போது அர­சியல் தீர்வு முயற்­சியை சுதந்­திரக் கட்சி எதிர்ப்­பதும் சுதந்­திரக் கட்சி ஆட்­சியில் இருக்­கும்­போது அர­சியல் தீர்வு முயற்­சியை ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்ப்­ப­து­மாக நிலைமை நீடித்­தி­ருந்­தது. ஆனால் தற்­போது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளதால் நீண்­ட­கால இனப் பிரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு சாத­க­மான நிலைமை தோன்­றி­யுள்­ளது.

எனினும் அந்த நிலை­மை­யிலும் கூட முரண்­பா­டு­களும் சர்ச்­சை­களும் பிரச்­சி­னை­களும் தோன்றிக் கொண்­டுதான் இருக்­கின்­றன. காரணம் என்­னதான் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒரு புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் இணைந்து ஆட்சி அமைத்­தாலும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்று வரும்­போது இரு வேறு­பட்ட நிலை­மை­யில் இரண்டு கோணங்­களில் இருந்து செயற்­ப­டு­வ­தையே அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்த நிலை­மையே தற்­போது புதிய அர­சிய­ல­மைப்பு விட­யத்தில் நாம் காண்­கிறோம். வேறு அனைத்துக் கார­ணங்­களை விடவும் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது அர­சியல் தீர்வு என்ற அடிப்­ப­டையில் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக காணப்­ப­டு­கி­றது.

அதற்­கா­கவே பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரா­ஜ­தந்­திர ரீதி­யிலும் சாணக்­கி­ய­மான அர­சியல் போக்­கிலும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளது. அது ஒரு வகையில் ஒரு ஆபத்­தான அர­சியல் தீர்­மா­ன­மா­கவும் கூட்­ட­மைப்­புக்கு அமை­யலாம்.

அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டை கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலை­யிலும் அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்தில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டா­விடின் அது தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற மிகப் பெரிய துரோ­க­மாக அமைந்து விடும். புதிய அர­சாங்கம் தமக்கு முழு­மை­யான தொரு அர­சியல் தீர்வை வழங்கும் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே தமிழ் பேசும் மக்கள் புதிய அர­சாங்­கத்­திற்கு முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தனர்.

எனினும் புதிய அர­சாங்­கமும் கடந்த கால வர­லாற்றை நிரூபிப்­பதைப் போன்றே செயற்­பட்டு வரு­கின்­றது. எந்­த­வொரு வகை­யிலும் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்­பதில் அக்­கறை காட்­டு­வ­தாக இல்லை. தொடர்ந்தும் பிரச்­சி­னை­களை இழுத்­த­டித்துக் கொண்டு செல்­வ­தி­லேயே அக்­கறை காட்­டப்­ப­டு­கி­றது. மாறாக இந்த விட­யத்தில் அர­சாங்கம் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வுத் திட்­ட­மொன்றை விரைவில் அர­சாங்கம் முன்­வைக்க வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு அதற்கு நாட்டின் சகல மக்களினதும் ஆதரவு பெறப்பட வேண்டும். அதனூடாகவே தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான தீர்வை வழங்க முடியும்.

இந்த விடயத்தில் நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதனை உதாசீனப்படுத்தி எந்தவொரு கட்சியும் செயற்பட முடியாது. அரசாங்கம் இந்த விடயத்திற்கு தீர்வை வழங்குவதாக கூறியே மக்களின் ஆணையை பெற்று பதவிக்கு வந்துள்ளது. எனவே அந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்பை காட்ட வேண்டியது அவசியமாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இந்த செயற்பாட்டில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் தேவையை அறிந்து அக் கட்சி செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. மேலும் மஹிந்த ராஜபக் ஷ அணியினரும் தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தொடர்பில் தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாரிய பொறுப்புகள் உள்ளன.

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்பியடித்துவிடக்கூடாது. மக்களுக்கான நீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கையில் நீண்டகால விவகாரமான அரசியல் தீர்வு செயற்பாட்டில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சுய அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு புதிய அரசியலமைப்பு விடயத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் எந்தவொரு தரப்பும் செயற்பட்டு விடக்கூடாது என்பது இங்கு முக்கியமானதாகும்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்