மோடியின் நிகழ்வில் கலந்துகொள்வேன் – மஹிந்த
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை தான் எதிர்க்க வில்லையெனவும், மோடி கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் தான் கலந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.