பாலியல் குற்றச்சாட்டு: மூடி மறைத்தாரா குருகுலராசா?
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான
குற்றச்சாட் டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்களும் அதன் செயலாளர்களும் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கண்டறிவுகள், பரிந்துரைகள் பகுதியில் அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இடமாற்றங்களின்போது அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளது. செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையற்ற விதத்தில் அமைச்சர் பயன்படுத்த வகை செய்யும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டிருக்கின்றது. இதில் செயலாளரும் கையெழுத்திட்டு உடந்தையாக இருந்திருகிறார்.
இப்படியானதொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டபோது தலைமைச் செயலாளரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்துள்ளார். வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டு வருவதை ஆமோதிப்பது போன்று இது உள்ளது.
மிக முக்கியமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைச் சிறுமி ஒருவர் பாடசாலை அதிபரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் குறித்துக் குரல் எழுப்பிய பாடசாலை ஆசிரியரை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து, கல்வி அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். இது மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றம்.
எனவே கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உடனடியாகத் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும். அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளரும் அந்தப் பதவிலியிருந்து விலக வேண்டும் என விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.








