நல்லாட்சி அரசாங்கத்தினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது: விஜேதாச ராஜபக்ஷ
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற முடியாது என்று நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நல்லாட்சி அரசாங்கமானது, 18வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியமை, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை, சுயாதீன ஆணைக்குழுக்கள் என குறிப்பிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது. உலகின் எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு அரசாங்கமும் தான் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதாக கூறமுடியாது” என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.








