வடக்கிற்கு மகாவலி நீர் – ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சாத்திய ஆய்வு
மகாவலி கங்கை நீரை வடக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான சாத்திய ஆய்வை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் இந்த சாத்திய ஆய்வை மேற்கொண்டு வருவதாக, மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சின் செயலர் உதய செனிவிரத்ன தெரிவித்தார்.
மொரகஹகந்த அணைக்கட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. களுகங்கை நீர்த்தேக்கத்தை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும்.
இந்த திட்டங்களின மூலம் நீரை வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம், இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும்.
அத்துடன், 85 ஆயிரம் ஏக்கரில் அபிவிருத்தி வலயம் ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கவுள்ளது.
களு கங்கையுடன் மொரகஹகந்த நீர்த்தேக்கம், கால்வாய் மூலம் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.