இன்று முதல் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும்
நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் இன்று முதல் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.