மஹிந்த – மைத்திரி விரைவில் சந்திப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் விரிசல்களை தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் நேரடி கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பதற்கு இரு தரப்பிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்பிலும் உள்ள முக்கிய உறுப்பினர்கள் பல தடவைகள் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கு கலந்துரையாடல் மேசைக்கு வருமாறு உலகில் மிகவும் பலமான நாடொன்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் கட்சியிலுள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு தனிக் கட்சியாக போட்டியிட்டால், பாரிய வெற்றியொன்றை சந்திக்கலாம் என்பது இரு தரப்பிலுமுள்ளவர்களின் கருத்தாக மாறியுள்ளதாகவும் இதனாலேயே இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








