புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் முனைப்பில் அரசாங்கம்!
தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா கட்சிக்கும் இடையில் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு கட்சிகளுக்கு இடையில் ஏற்கனவே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டிருந்த நிலையில், அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.








