Breaking News

விடுதலைப்பு புலிகளுடனான போர் முடிவடைந்தமையை மஹிந்த ஏன் கவலையாக கருதுகிறார்?

தமிழீழ விடுதலைப்புலிகளின் 30 வரு டகால ஆயுதப் போராட்டம் தொட ர்பாக மிகவும் கவலை அடைந்துள்ள தாகவும் பெரும்பாவம் என்றும் தவறி ழைத்து விட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும் மனவேதனையடைவதாக தனது ஆத ங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை போர்க் குற்ற விசாரணை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் மொத்த இராணு வத்தையும் காட்டிக்கொடுக்கும் செயல்வடிவத்தை நல்லாட்சி முன்னெடுக்க வுள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளாா். 

பதுளை கஹட்டரெப்ப பகுதியிலுள்ள விகாரையில் நேற்றைய தினம் நடைபெற்ற சமய வழிபாடுகளில் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துகொண்ட இதன் பின்னர் ஊடகங்களுக்கு  வழங்கிய கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.  
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்பிலிருந்தே இந்த விடயத்தை தாம் கூறியிருந்ததாகவும், தற்போது சர்வதேசத்துடன் நல்லாட்சி செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய அதனை முன்னெடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.