மைத்திரிபால வழங்கிய வாக்குறுதிளை நிறைவேற்றவில்லை; உறவுகள் குற்றச்சாட்டு
காணாமற்போனவர்கள் தொடர்பி லான பிரச்சினைகளுக்கு தீர்வுகா ணும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வில்லையென காணாமல் ஆக்க ப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோ.கனரஞ்சனி குற்றம்சாட்டி யுள்ளார். கடந்த ஜுன் 12ஆம் திகதி யாழ். ஆளுர் அலுவலகத்தில் காணாமற்போன வர்களின் உறவினர்களை சந்தித்த ஜனாதிபதி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிச் சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று காணாமற்போன உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.








