சிறைச்சாலை தாக்குதலில் 37 பேர் பலி. 14 பேர் காயம் - காரணம் என்ன?
வெனிசுவேலாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயம டைந்துள்ளனர்.
வெனிசுவேலாவின் தென் மாநிலமான அமஸோனஸில் அமைந்துள்ள சிறைச்சாலையி லேயே குறித்த மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கி ழமை நள்ளிரவு வேளையில் பாது காப்பு அதிகாரிக ளுக்கும் கைதிகளுக்குமிடையில் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை கைதிகள் தம்வசப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் கட்டுப்பாட்டை தமதாக்கி கொள்ளும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலின் போது துப்பாக்கி பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் 14 சிறைக்காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த மோதலை அந்நாட்டு விசேட படைப்பிரிவினர் கட்டுக்குள் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








