நான் பதவி விலகப்போவதில்லை, தேவையெனில் கட்சியோ, முதலமைச்சரோ அதனைச் செய்யட்டும் – டெனீஸ்வரன்!
நான் சுயமாக முன்வந்து எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யப்போவதில்லையென அமை ச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று மன்னாரில் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பிலேயே மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நான் எனது பதவியை இராஜினாமாச் செய்யப்போவதில்லை. தேவையெனில் முதலமைச்சரோ, எனது கட்சியி னரோ அதனைச் செய்யட்டும்.
கடந்த 12ஆம் நாள் ரெலோ அமைப்பின் தலை வர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் டெனீஸ்வரனை பதவி விலகுமாறு கட்சி தெரிவித்தி ருந்தது. அவர்பதவி விலகாவிடின் அவர்கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








