2009 இல் போரும் சேறும் போராளிகளும் மக்களும் – அமரதாஸ்
2009 ஆம் ஆண்டு காலப்பகுதி. போர், மக்களை தொடராக வீதியில் நடக்க வைத்து நெரிசல்…’தொடரணியாக’ அர்ப்பரித்ததினால் வேகமாக நகர முடியாமல் திணறிப் போயின குழ ந்தைகளும், வயோதிபர்களும் அங்க ங்கே எறிகணைகள் விழுந்து உயிர்க ளைக் குடித்துக்கொண்டு அவல ஒலியை எழுப்பிய வண்ணமும் குண்டுச் சத்தங்கள் அதிர்ந்தவண்ணமே இருந்தது. வேவு விமானங்கள் வட்டமிட வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விடுதலைப் புலிகள் பெண் போராளிகள் பலர், சன நெரிசலில் சிக்கிவிட ஒளிப்படங்களை உள்வாங்கிய நானும் சிக்கிக் தவித்தேன்.
அந்தப் போராளிகளை, கட்டாய ஆட்சேர்ப்பு அணியினராகக் கருதிய இள வயதினர் சிலர் ‘கலவரப்பட்டு’ ஒளிந்தார்கள். போராளிகள், களமுனைக்குச் செல்கின்றார்கள் என்பதை அறிந்த பெற்றோர் தமது பிள்ளைகளும் செல்வா ர்களோ என்று பார்த்தவிழி காத்திருந்து காணவில்லையென்ற தவிப்பில் பெற்றோரும் தேடினார்கள்.
போராளிகள் அதிகமாக காணப்பட்டதால் வேவு விமானங்களும் இவர்களை கண்காணிக்கத் தொடர்ந்த அந்த இடத்தில் சிறிலங்கா விமானப் படையினரின் ‘கிபிர்’ தாக்குதல் நடக்கக் கூடுமென்று மக்கள் பயந்ததனால்.
போராளிகள் விரைவாகப் போக இடம் மாற வேண்டிய தேவையேற்பட சன நெரிசல் அதிகரிக்கவும் மக்கள் பலரும், வீதியிலிருந்து நகர்ந்து வயல்வெளி யின் சேற்றில் இறங்கி நடந்தார்கள்.
முடிந்த வரைக்கும் சில ஒளிப்ப டங்களை எடுத்துக்கொண்டிருந்த நானும். நகரவே முடியாத ஒரு சந்தர்ப்பத்தில், நானும் சேற்றில் இறங்கியிருப்பதை உணர்ந்தேன்.










