Breaking News

தமிழ் மண்ணில் தங்கத்தேரில் கதிர்வேலன்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வரு டாந்த மகோற்சவத்தின் இருபத்து நான்காவது திருவிழாவான தேர்த்தி ருவிழா தற்பொழுது மிகவும் கோலா கலமாக நடைபெற்றுக்கொண்டிரு க்கின்றது. ஆறுமுகப் பெரு மான் பல லட்சம் பக்த அடியார்கள் படைசூழ அலங்கரிக்கப்பட்ட சித்தி ரத்தேரில் வெளி வீதியுலா வந்து கொண்டி ருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. ஆவணி மாத அமாவாசையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களைக் கொண்ட பெருந்திருவிழாவாக விளங்குவது நல்லூர் கந்தன் ஆலயத்தின் சிறப்பம்சமாகும். 

இலங்கையிலிருந்து மட்டுமன்றி உலகமெல்லாம் பரந்து வாழ்கின்ற லட்சோபலட்சம் மக்கள் இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து கந்தனின் திருத்தலத்தில் கூடியிருக்கின்றமை நெகிழ்ச்சிமிக்க தருணமாகக் காணப்ப டுகின்றது.