Breaking News

கண் அசைவுக்குக் கட்டுப்படும் கணினி விரைவில்

மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரை வாகவும், எளிமையுடனும் கணி னியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப த்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு கணினி கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்ப ட்டுள்ளது. 

இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நு ட்பத்தின் மூலம் மாற்றியமைத்துக்கொள்ளலாம். 

விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பரிசோதனை முயற்சியாக இது செயற்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் இயங்குதளங்களில் முதலில் இந்த சொஃப்ட்வெயாரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 

இதனைத்தொடர்ந்து, Eye Control என்ற வசதியை ஆக்டிவேட் செய்து அதன்மூலம் கம்ப்யூட்டரில் தோன்றும் மௌஸ் மற்றும் கீபோர்ட் ஆகிய வற்றிடம் பார்த்தும், பேசியும் இயக்க முடியும். “முதலாவதாக, Eye Control மென்பொருளை உற்று நோக்குவதன் மூலம் இதனை உபயோகிக்க முடியும். நாம் எதை பார்க்கின்றோம் என இதனால் துல்லியமாக கணிக்க முடியும். அதற்கேற்ப இது இயங்கும் திறன் படைத்தது. 

இருப்பினும், சூரிய ஒளி அதிகம் உள்ள இடங்களில் இந்த வசதியை உப யோகிப்பதில் சிக்கல் உள்ளது. அதனை சரிசெய்யும் விதமாக நடவ டிக்கைகள் மேற்கொள்ளபப்பட்டு வருகின்றன,” என மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைமை மென்பொறியியலாளர் டோனோ சர்கார் கூறியுள்ளார்.