சிறையில் நளினி சாகும் வரை உண்ணாவிரதம்! - THAMILKINGDOM சிறையில் நளினி சாகும் வரை உண்ணாவிரதம்! - THAMILKINGDOM
 • Latest News

  சிறையில் நளினி சாகும் வரை உண்ணாவிரதம்!

   சிறையில் இருக்கும் நளினி சிறைத்துறைக்கு மனு அளித்துள்ளாா்.      சாகும்வரை  உண்ணா விரதம். 

  மேற்கொள்வதற்கு அனுமதி கோரி கணவர் தொடர் உண்ணாவிரதத்தில் போராடும் நிலையில் நானும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்ட த்தில் இறக்கியுள்ளேன் என  மனு கொடுத்துள்ளார். முருகன் உண்ணா விரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறைத்துறையிடம் மனு அளித்தார்.  கடந்த1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். 

  இக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் கருணை அடிப்படையில்  ஆயுள் தண்ட னையாக குறைக்கப்பட்டது. 

  பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

  அதன் அடிப்படையில் நளினியை முருகன் சந்தித்து வந்தார். முருகன் ஜீவசமாதி இந்நிலையில் ஜீவசமாதி அடைவதற்காக முருகன் கடந்த 18ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

  உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்ட போதிலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு ள்ளார். 

  ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதிக்கு அனுமதி வேண்டும் என்று கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். 

  இதையொட்டி, அவரது உண்ணாவிரத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நளினி உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். 

  நளினி உண்ணாவிரதம் கணவரை சந்திக்க விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற கோரி வரும் நளினியும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியு ள்ளார். 

  முருகன், தன் உண்ணாவிரதத்தை கைவிடும் வரை நளினியும் அவர் உண்ணா விரதத்தை தொடர்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். 

  கணவர் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று நளினி சிறைத்துறைக்கு எழுதியுள்ள மனு வில் தெரிவித்துள்ளார். 

  முருகன் உண்ணாவிரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறைத்துறையிடம் மனு அளித்தார். 

  பேரறிவாளன் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் நிலையில், முருகன் மற்றும் நளினி ஆகியோர் சிறைக்குள் உண்ணாவிரதம் இருப்பது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிறையில் நளினி சாகும் வரை உண்ணாவிரதம்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top