ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கில் விடுதலைப் புலிகள் அழிக்கப்படவில்லையென – இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன

அமைச்சரவை கோட்பாடுகளை தெரி விக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கருத்துத் தெரிவித்தபோதே மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவம் முற்றாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் ஜெகத்சூரியவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கானது, விடுத லைப்புலிகளின் கோட்பாடு இன்னமும் உயிருடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என பகிரங்கமாக தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் ராஜித சேனாரட்ண கருத்துத் தெரிவிக்கு ம்போது, போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சியங்கள் அடிப்படை யில் நடவடிக்கை எடுக்கப்படுமென வும், போரில் இடம்பெற்ற அனை த்துக் கொலைகளும் மனித உரிமை மீறல்கள் இல்லையென தெரிவித்துள்ளார்.