Breaking News

70ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் பல நிகழ்வுகள் ஏற்பாடு!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் பல்வேறு நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். 

இந்திய சுதந்திர தினத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தையும் முன்னிட்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நாளை (12.08.2017) ஸ்ரீதேவி நடித்த ‘மம்’ திரைப்படம் ராஜா திரையரங்கில் பிற்பகல் 2.30 க்கு இலவசமாகத் திரையிடப்படவுள்ளது. 

மேலும் எதிர்வரும் 16ஆம் திகதி சங்கிலியன் தோப்பில் பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. 

அத்துடன் ஓகஸ்ட் 17ஆம் திகதி மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரியும் பயிற்சிப் பட்டறையும், வவுனியா ஸ்ரீகந்தசுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நாளை முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நல்லூர் சுகாதார பணிமனையில் தொடர் புத்தக கண்காட்சி ஏற்பாடாகி உள்ளது. 

இதில் இலங்கை, இந்திய பதிப்பகங்கள் பல பங்கேற்கவுள்ளதாக இலங்கை க்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.