Breaking News

யாழ்; கொக்குவில் பகுதியில் இன்று காலை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியவர்கள் என்ற  பெயரில் இன்று திங்கட்கிழமையும் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம் கொக்குவில் நந்தாவில் அம்மன் வீதி பகுதியில் கோப்பாய் காவல்நிலையத்தினைச் சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்களை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 க்கும்மேற்பட்ட வர்கள் வாளினால் வீசி தாக்குதல் மேற்கொண்டி ருந்தனர். 

இது தொடர்பில் ஏற்கனவே 20 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஆறு பேரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் காவல்துறையினரினால் தேடப்பட்டு வந்த கொக்குவிலைச் சேர்ந்த விக்டர் நிசாந் என்பவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் முன்னாள் விடு தலைப்புலி உறுப்பினர் எனவும் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.