தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு சதித் திட்டம் : யோகேஸ்வரன் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் போருக்கு பின்னர் தமிழர்களின் நிலங்களை பூரணமாக அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்ப டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பி னர் சீ.யோகேஸ்வரன்
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கி ழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”கிழக்கு மாகா ணத்தில் எல்லை கிராமங்களில் பௌத்த மத துறவிகளால் பௌத்தர்கள் வாழ்ந்த பகுதிகளாக தமிழ் மக்களுடைய நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு சிங்கள குடியேற்றங்களால் நிரப்பபடுகின்றது.
அதேபோல் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரால் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இவ்வாறு வடகிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னர் தமிழர்களின் நிலங்களை பூரணமாக அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றது.
உதாரணமாக வாகரை பிரதேச செயலர் பிரிவில் காரமுனை கிராமத்தில் அண்மையில் 188 குடும்பங்களுக்கு தலா 6 ஏக்கர் காணி வழங்கி சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க சதி திட்டம் தீட்டப்பட்டது.
மேலும் மேற்படி சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட காணி ஆவணங்கள் சிங்கள மொழியில் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே நன்கு திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் கல்லோயா திட்டம் மற்றும் மகாவலி திட்டம் ஆகியவற்றின் ஊடாகவும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.”