Breaking News

அமெரிக்க விமானத்தை வீழ்த்த சதித்திட்டம் தீட்டியவர் கைது.

அமெரிக்க விமானத்தை வீழ்த்த சதித்திட்டம் தீட்டியவர், துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி கைது நடவடிக்கை நேற்று (வியாழ க்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் துருக்கியை பிறப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவரது பெயர் ரெனாட் பாக்கீவ் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், ரெனாட்டிற்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ளது எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ள னர். அன்டானா பகுதியிலுள்ள இன்சர்லிக் விமானத்தளத்திலிருந்து சந்தேகநபர் ஒருவர் அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்த திட்டமிடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே குறித்த பகுதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து பொலிஸாரால் சிறைபிடிக்கப்பட்ட ரெனாட், தான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் ஆளில்லா விமானத்தின் துணை கொண்டு அமெரிக்க விமானத்தை வீழ்த்தத் திட்டம் தீட்டியதாகவும் பொலி ஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதுவரை துருக்கி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து நீதிமன்றில் ஆஜர்ப டுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.